• Sep 11 2026

‘சர்தார் 2’ முதல் நாள் வசூல் இவ்வளவுதானா? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!

shali / 48 minutes ago

Advertisement

Listen News!

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘சர்தார் 2’. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் ஸ்பை த்ரில்லர் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். மேலும் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரதிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ளதால், ‘சர்தார் 2’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.


இந்நிலையில், ‘சர்தார் 2’ திரைப்படம் நேற்று காலை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. வெளியான முதல் நாளிலேயே படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ‘சர்தார் 2’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூ.6.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.5.30 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இந்த வசூல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. வரும் நாட்களில் படத்திற்கான வரவேற்பு மற்றும் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement