தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சூரி, தற்போது ‘மண்டாடி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்தித்துள்ளார். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருந்த ‘மண்டாடி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, படத்தின் கதைக்களம் மற்றும் சூரியின் நடிப்பு குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இணையதளம் வெளியிட்டுள்ள பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, இந்தியாவில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ.4.75 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், உலகம் முழுவதும் இப்படம் ரூ.6.55 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், வரும் நாட்களில் ரசிகர்களின் வருகை அதிகரித்து வசூலும் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!