• Sep 10 2026

தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் 'மண்டாடி'..வெளியான டுவிட்டர் விமர்சனம் இதோ.!!

shali / 43 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூரி. அவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘மண்டாடி’. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். 

வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதிரடியான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், இன்று (செப்டம்பர் 10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


‘மண்டாடி’ திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதனால் சூரியின் நடிப்பை பல்வேறு மொழி ரசிகர்களும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திரா விஜய், ஸ்டண்ட் சிவா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக சூரி மற்றும் சுஹாஸ் இடையேயான காட்சிகள் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘மண்டாடி’ படத்தை முதல் நாளே திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், தங்களது கருத்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் கதை, சூரியின் நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள், சுஹாஸின் வில்லத்தனம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement