தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. நடிகர் விஜய்யுடன் த்ரிஷா ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளதால், இருவரையும் சுற்றி அவ்வப்போது பல்வேறு கிசுகிசுக்களும் சமூக வலைதளப் பேச்சுகளும் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, விஜயின் மனைவி சங்கீதா தனது கணவர் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்ததுடன், தேவைப்பட்டால் அந்த நடிகை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த தகவல்களும் பரவி வந்தன. அந்த நடிகை திரிஷா தான் என ரசிகர்கள் சிலர் தொடர்ந்து கூறி வந்தாலும், இதுகுறித்து திரிஷா எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், விஜய் தமிழக முதலமைச்சராக இருக்கும் சூழலில் அவருடன் திரிஷா நெருக்கமாக காணப்படும் புகைப்படங்களும் நிகழ்வுகளும் கவனம் பெற்றுள்ளன. திருமண நிகழ்ச்சிகளில் விஜய்யுடன் அவர் சென்றது, அஜித்தின் தாயார் மறைவுக்கு விஜய் சென்றபோது உடனிருந்தது உள்ளிட்ட சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகின.
தற்போது விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார். திரிஷாவும் ஏற்கனவே லண்டனில் இருப்பதால், இந்த போட்டியை காண அவர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகை ராதிகா சரத்குமாரும் லண்டனில் அஜித்தை சந்தித்ததுடன், திரிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனால் விஜய், திரிஷா, அஜித் ஆகியோரின் லண்டன் நிகழ்வுகளை இணைத்து, “என்னமோ நடக்குது” என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!