விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9, வாரந்தோறும் புதிய சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் களைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த எபிசொட்டில் போட்டியாளர் பிரவீன் காந்தி கூறிய சில கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிக்பாஸ் வீட்டிற்குள் பேசிய பிரவீன் காந்தி, “நான் சொல்லுறது கோல்டன் வார்த்தை இல்ல, டைமண்ட் வார்த்தை! ஒரு புருஷன், பொண்டாட்டி பேர்ல சொத்தை எழுதி வைச்சுட்டான்னா... எப்ப வேணா அவன் கஷ்டப்படுவான்.
ஏன்னா பொண்டாட்டி பசங்க கூட சேர்ந்திடுவாங்க. அதனால பொண்டாட்டியா இருந்தாலும், உன் பிள்ளையா இருந்தாலும் நம்பாத. அதே மாதிரி கல்யாணம் பண்ணுறதே வேஸ்ட். அதுக்கு பிடிச்சவங்க கூட வாழ்ந்திட்டு போகலாம்.” என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து வீடியோ கிளிப்பாக சமூக ஊடகங்களில் வெளியானதும், ரசிகர்களிடையே பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அனுபவம் எனக் கருதினாலும், பலர் இதனை கண்டித்தும் இருக்கிறார்கள்.
Listen News!