• Jan 19 2025

வாடகை வீட்டில் வசிக்கும் பிரபாஸ் ... வெளியான உண்மை , வீட்டு வாடகை இவ்வளவு தானா ?...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் 2002-ஆம் ஆண்டு வெளியான 'ஈஸ்வர்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் பிரபாஸ், எஸ் .எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்களின் மூலம் பலரும் வியக்கும் வகையில் இந்தியா மட்டுமல்ல  முழு உலகம் முழுவதும் பிரபலமானார்.


தற்போது பிரபாஸ் வாடகை வீட்டில் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. பல படங்களில் நடித்து  உச்ச நட்சத்திரங்களானவர்கள் மத்தியில் ஒரு படம் மூலம் உச்ச நட்சத்திரமானவர் நடிகர் பிரபாஸ் மட்டுமே . பாகுபலி படத்தின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார் .  இந் நிலையில் படங்களில் பிசியாக நடித்து வரும்  நடிகர் பிரபாஸ்  தற்போது லண்டனில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிரபலமான நடிகர்கள் பெரும்பாலும் வெளியில் சுதந்திரமாக செல்ல முடிவதில்லை. உணவகங்களில் உணவருந்தவோ அல்லது ஷாப்பிங்கில் ஈடுபடவோ முடியாது.


 படப்பிடிப்பின் போது கூட, அவர்கள் ஸ்டுடியோக்கள் அல்லது செட்டுகளுக்குள் மட்டுமே இருப்பார்கள். எங்கு சென்றாலும் ரசிகர்கள் திரண்டுவிடுவதால் பாதுகாப்பு பிரச்சினை உருவாகிறது .இதனால் நடிகர்கள் பலரும் ஓய்வு நேரங்களில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் லண்டனில் இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கி தனது ஓய்வு நேரத்தை அங்கு செலவிட்டு வருகிறார் . வீட்டு வாடகைக்கு மட்டுமே  மாதம் ரூ. 60 லட்சம் செலவு செய்கிறார் . சலார் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராஜாசாப் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் 'ராஜாசாப்' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வருகின்றார். 


Advertisement

Advertisement