தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சங்ளைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.
இதனை அடுத்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த பிரம்மாண்டமாக எடுக்கப்படும் கோட் படத்தில், நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
சென்னையில் முழுக்க செட் போட்டு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கலாபதி, கோட் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.
அதன்படி, மாஸ்கோவில் பனிப்பொழிவின் ஸ்னாப்ஷாட்டுடன் அவரும் குழுவும் தற்போது படத்தின் வரவிருக்கும் ஷெட்யூலுக்கு ஒரு இடத் தேர்வை நடத்தி வருவதாக அந்த தலைப்பில் அவர் வெளிப்படுத்தி, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

Listen News!