• Dec 06 2024

பொன்னியின் செல்வன் பட நடிகருக்கு திருமண நிச்சயம் முடிஞ்சா? வைரல் போட்டோஸ்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு வசூலை  குவித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் அணிந்து வந்த உடைகளும் நகைகளும் பலரின் கவனம் ஈர்த்திருந்தது.

பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தை விடவும் முதலாவது பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. முதலாவது பாகம் தான் ரசிகர்களின் வரவேற்பிலும் வசூலிலும் அதிக மாஸ் காட்டியது. இரண்டாவது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான போதும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

d_i_a

மேலும் இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களுடைய காஸ்டியூம் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அதே கேரக்டர்களை  பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டிருந்தனர்.


இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் வரகுணம் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அர்ஜுன் சிதம்பரம் தனது நீண்ட நாள் காதலி ஜெயஸ்ரீ சந்திரசேகரனை நிச்சயம் செய்துள்ளார். இவர்களுடைய திருமண தேதி விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கியூட்டான புகைப்படம் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement