• Jan 19 2025

நயன்தாராவுக்கு 24 மணிநேர கெடு கொடுத்து மிரட்டிய தனுஷின் வக்கீல்..! வெடித்தது பூகம்பம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா மற்றும் தனுஷ். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய விடயம் என்றால் அது நயன்தாரா வெளியிட்ட அறிக்கை தான்.

அதாவது லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்யும்போது இவர்களுடைய திருமணம் ஆவணப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்கள் சொன்னது நடைபெறவில்லை.

d_i_a

இதைத்தொடர்ந்து நயன்தாராவின் திருமண டாக்குமெண்டரி அவருடைய பிறந்தநாள் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு முதல் நாளில் நயன்தாரா நீண்ட அறிக்கையை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அவர் வெளியிட்ட அறிக்கையில், நானும் ரவுடிதான் படம் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணங்களை உடையது. அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை திருமண டாக்குமெண்டில் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு தனுஷ் தடையாக காணப்படுகின்றார். அவரிடம் அனுமதி கேட்டும் தரவில்லை.


என் மீது உள்ள தனிப்பட்ட பழிவாங்கங்கள் காரணமாகவே இவர் இவ்வாறு செய்கின்றார். மூன்று நிமிட வீடியோக்கு 10 கோடி ரூபாய் கேட்கின்றார். அவரின் அனுமதிக்காக திட்டத்த இரண்டு ஆண்டுகள் காத்திருந்தோம். கடவுள் முன்னிலையில் நிச்சயமாக நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று தனது வேதனையை முன் வைத்திருந்தார். அதன் பின்பு நயன்தாராவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று தனுஷின் வக்கீல் மிரட்டல் விடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது மூன்று நிமிட வீடியோவுக்கு தனுஷ் பத்து கோடி கேட்கின்றார் என்று நயன்தாரா தனது பக்கம் உள்ள நியாயங்களையும்,  தனுஷ் பக்கம் உள்ள தவறையும் சுட்டிக்காட்டி  வெளியிட்ட அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என தனுஷின் வக்கீல் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement