• Aug 05 2025

சூப்பர் ஸ்டாருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர்..! வைரலாகும் புகைப்படங்கள்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் சாதனை படைத்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அந்த படம் உலகளவில் ₹635 கோடிக்கு மேல் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.


அனிருத் இசை, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்த அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது ‘ஜெயிலர் 2’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.


பல மாதங்களுக்கு முன் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த், யோகி பாபு மற்றும் இயக்குநர் நெல்சன் இணைந்து நெல்சனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.


அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை Sun Pictures தங்களது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.


Advertisement

Advertisement