• Jul 13 2025

"ரெட்ரோ ஒரு போரை எதிர்கொண்டுவிட்டது.." இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் பதிவு..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் 50வது நாளைக் கடந்ததை ஒட்டி இயக்குநர் தனது நெகிழ்வை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்ட அவர் “ரெட்ரோ வெளியான பிறகு அது ஒரு போரையே எதிர்கொண்டது. விமர்சனங்கள், குறிவைத்து நடத்தப்பட்ட வெறுப்பு தாக்குதல்கள் இதை எல்லாம் தாண்டி நீங்கள் கொடுத்த அன்புதான் இந்த போரில் எங்களை வெற்றி பெற வைத்தது” என கூறியுள்ளார். 


மேலும் " அன்பால் போரை வென்று விட்டோம் என்பதுதான் உண்மை. 50 நாட்கள் என்பது எங்களுக்குப் பெரும் உற்சாகம். இந்த வெற்றிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை” என்றும் பதிவிட்டுள்ளார். ரிலீசுக்கு பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களிடையே நிலையான ஆதரவை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓட்டத்தைப் பெற்றுள்ளது. ரெட்ரோ 50வது நாள் மைலுக்கல்லை எட்டியுள்ள நிலையில், இயக்குநரின் உணர்ச்சிகரமான பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Advertisement

Advertisement