• Sep 19 2025

தாயின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவினை வெளியிட்ட புகழ்.! வைரலாகும் போட்டோஸ்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிப் பயணத்தில் மக்களது மனதை வென்ற ஒரு முகம் என்றால் அது நடிகர் புகழ் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலமாக மட்டுமல்லாது, விஜய் டீவியின் வழியாக பல்வேறு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்.


இந்நிலையில், அவர் தற்போது தனது அம்மாவின் பிறந்த நாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும், உணர்வோடும்  கொண்டாடுகிறார். இந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அதனுடன் மனதைக் கவரும் ஒரு பதிவு ஒன்றையும் இணைத்துள்ளார். அவரது பதிவே இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இன்ஸ்டாகிராமில் புகழ் வெளியிட்ட புகைப்படங்களில், அம்மா மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும் பாசமுள்ள அணுகுமுறையுடனும் இருக்கும் சில நெருக்கமான தருணங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில், அவருடைய அம்மா புன்னகையுடன் மிகவும் அழகாக காணப்படுகின்றார்.

அந்த பதிவுடன் புகழ் எழுதிய வரிகள் தான் அனைவரையும் சென்டிமென்டலாக்க வைத்துள்ளது. “எழுத முடியாத கவிதை… அம்மா..! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..” இந்த பதிவு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement