• Jul 27 2024

மக்கள் திரையரங்குக்கு வருவதில்லை! ஓபனாக விமர்சிக்கும் கவிஞர் வைரமுத்து!

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த காலங்களில் திரைப்படம் என்றாலே அது திரையரங்குகளில் தான் பார்க்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் திரையரங்குகளுக்கு வருவதை குறைத்து விட்டனர். இதனை விமர்சித்து வைரமுத்து பேசியுள்ளார்.


வைரமுத்து ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் இது வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.  


இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் பேசும் பொழுது "தமிழகத்தில் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது; இது கவலை அளிக்கிறது, ஆனாலும் சினிமா அழியாது" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement