• Jul 27 2024

தன்னைவிட 6 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகும் நயன்? எல்லாம் கோடி தான் காரணம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தன்னைவிட ஆறு வயது குறைந்த நடிகர் உடன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் இதற்கு ஒரே காரணம் அவருக்கு இதுவரை கொடுக்காத அளவிற்கு மிகப்பெரிய சம்பளம் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டது தான் என்றும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவர் தனது வயதுக்கு பொருத்தமான நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் பெரும்பாலும் இளம் நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் கவின்   நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் அவர் கவின் ஜோடியாகவே நடிக்கிறார் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



கவினுக்கு வெறும் 33 வயது மட்டுமே ஆகும் நிலையில் தன்னை விட ஆறு வயது குறைந்த நடிகருடன் ஜோடியாக நடிப்பதற்கு நயன்தாரா ஒப்புக் கொண்டதற்கு ஒரே காரணம் அவருக்கு இதுவரை கொடுக்காத அளவுக்கு மிகப்பெரிய சம்பளம் கோடி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் கதையே ஒரு இளைஞர் தன்னைவிட ஆறு வயது அதிகமான ஒரு பெண்ணை காதலித்து எப்படி திருமணம் செய்து கொள்கிறார் என்ற வகையில், கதைக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதற்காக தான் கவினுடன் நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement