பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா செந்திலைப் பார்த்து நேற்று தான் வீட்டுக்கு வந்தோம் அதுக்குள்ள இந்த டிவி, ஷோபா எல்லாம் தேவையா என்று கேட்கிறார். மேலும் இப்புடி எல்லாம் செலவு பண்ணால் எப்புடி லோனைக் கட்டப்போறீங்க என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் நான் கண்டிப்பா கட்டிடுவேன் என்கிறார். பின் மீனா எனக்கு அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்ல என்கிறார்.

அதனை அடுத்து ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் ,கோமதி அம்மாவோட பிறந்த நாளுக்கு போவமா என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறார். பின் கோமதி பாண்டியன் கிட்ட இதை பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார்.
அப்புடியே கோமதி தனக்கும் பிறந்தநாளுக்கு போகணும் என்று ஆசையா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் நீ ஆசைப்படுறது எல்லாம் சரி அதுக்கு உன்ர அண்ணன் சம்மதிக்கணுமே என்கிறார். பின் கோமதி அம்மாவோட ஆசையை நிறைவேற்ற ரெண்டு பேரும் போய்ட்டு வருவமா என்று கேட்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் போறதுக்கு சம்மதிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சரவணன் பழனியோட கதைச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்த்த மயில் டைம் ஆச்சு இன்னும் தூங்கல என்று கோபப்படுறார். பின் சுகன்யா வந்து சரவணனை போய் தூங்கச் சொல்லுறார். இதனை அடுத்து மயில் சரவணனை பார்த்து நீங்க எதுக்காக என்னை கல்யாணம் செய்தனீங்க என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் இதை தான் நானும் யோசிச்சுக் கொண்டிருக்கன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!