80, 90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பலமொழி படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை நளினி. இவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்தார். எனினும் 13 வருடங்கள் கழித்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2000 ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முன்னணி நடிகையாக நடித்து வந்த நடிகை நளினி அதற்குப் பின்பு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சின்ன சின்ன கேரக்டர்களிலும் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் வெளியான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகை நளினி தனது கணவர் பற்றியும் எதற்காக பிரிந்தோம் என்றும் தெரிவித்துள்ளார் அதன்படி அவர் கூறுகையில், நல்லா போயிருந்த வாழ்க்கையில நாங்க பிரிஞ்ச காரணம் ஜாதகம் தான். அவர் நல்லா ஜோசியம் பார்ப்பார்.

கல்யாணம் ஆன கொஞ்ச வருஷத்திலேயே நாம நாலு, அஞ்சு வருஷத்திலேயே பிரிஞ்சிடுவோம் என்று சொல்லிட்டே இருப்பார். ஆனால் எப்படியோ ரப்பர் மாதிரி 13 வருஷம் இழுத்துட்டு வந்துட்டோம்.
ஆனாலும் உன்னை கல்யாணம் பண்ணதால தான் நல்லா இருந்தேன், அதே மாதிரி கல்யாணத்துக்கு எம்ஜிஆர் வருவாங்க என்ற ஒரே காரணத்துக்காக தான் உன்ன கல்யாணம் பண்ணினேன் என்றும் சொல்லுவார்.. என நளினி தெரிவித்தார்.
Listen News!