• Jan 18 2025

’இந்தியன் 2’ நெகட்டிவ் ரிசல்ட்.. பார்த்திபனின் ‘டீன்ஸ்’ படத்திற்கு ஜாக்பாட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில் இந்த படத்துடன் வெளியான ‘டீன்ஸ்’ படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் வருவதால் இந்த படத்திற்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் படம் வெளியாகும் தினத்தில் பார்த்திபன் தனது சின்ன பட்ஜெட் படமான ‘டீன்ஸ்’ படத்தை வெளியிடுகிறார் என்று பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தனது படம் மீது நம்பிக்கை இருப்பதால் இந்த படத்தை நான் தைரியமாக வெளியிடுகிறேன் என்று சொன்ன பார்த்திபன், ’இந்தியன் 2’ படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் வந்து என் படத்தை பார்த்தால் கூட போதும் என்று பெருந்தன்மையுடன் கூறியிருந்தார்.



இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதை அடுத்து ‘டீன்ஸ்’ படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது. குழந்தை நட்சத்திரங்களை வைத்து ஒரு மிகச்சிறந்த படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார் என்றும் இரண்டாம் பாதியில் படம் செம த்ரில்லிங்காக இருக்கிறது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே இன்னும் ஓரின நாளில் இந்த படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பாராத ஜாக்பாட் பார்த்திபனுக்கு கிடைத்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement