• Jan 18 2025

அடப்பாவிங்களா.. ‘இந்தியன் 2’ மீம்ஸ்களுக்கு ப்ரியா பவானி சங்கரின் கதறல் பதில்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது என்பதும் பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஷங்கர், கமல்ஹாசன், அனிருத், லைக்கா என பிரபலங்கள் இணைந்து இருந்தும், இந்த படம் ரசிகர்களை கவரவிலை என்பது துரதிஷ்டவசமாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு படத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டு மீம்ஸ்களாக பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரையும் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை.

’இந்தியன் 2’ படத்தில் அவரது கேரக்டர் குறித்து பலவிதமான மீம்ஸ் பதிவாகி வரும் நிலையில் அதற்கு பதில் அளித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் ’அடப்பாவிகளா இது ஜஸ்ட் கதறல் பாடலில் பிரியா பவானி சங்கர்’ என்ற பதிவு செய்துள்ளார். தன்னுடைய மீம்ஸ்களை கூட அவர் பெருந்தன்மை மனப்பான்மையுடன் எடுத்துக் கொண்டதாக ரசிகர்கள் இந்த பதிவுக்கு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement