• Jan 13 2026

ஒரு வழியாக முடிவுக்கு வந்த பராசக்தி ரிலீஸ் டேட் ; ஜனநாயகனுக்கு ஆப்பு உறுதி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இளையதளபதி  விஜயின் இறுதி படமாக  உருவாகி உள்ள படம்தான் ஜனநாயகன். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது.  விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 

மேலும் இந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. எனினும் இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாக பேசப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இம்முறை  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இன்னொரு பக்கம் பராசக்தி படத்தை முன்கூட்டியே வெளியிடப் படக் குழு திட்டமிட்டது. இந்த படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. மேலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்களை ஜனநாயகன் படம் வெளியாகும் அதே நாளில் பராசக்தியும் வெளியாக வேண்டும் என  வற்புறுத்தியதாகவும் கூறப்பட்டது. 


இந்த நிலையில், பராசக்தி படத்தின்  ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி ஜனவரி 10-ம் தேதி பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளது.  அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் வினியோஸ்தர்கள் கோரிக்கையை ஏற்று இந்த படத்தை ஜனவரி 10-ம் தேதி வெளியிடுகின்றோம் என தெரிவித்துள்ளனர். 


தற்போது ஜனநாயகன் படத்துடன்  சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளமை சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக காணப்படுகின்றது. 

ஏற்கனவே இளைய தளபதி விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்க துடிக்கின்றார்  என்ற கருத்துக்கு இது  தீனி போடுவது போல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement