• Jan 18 2025

நண்பேன்டா சம்பவம் செய்த அனிருத்! கடமைப்பட்டுள்ள நெல்சன்! தயாராகும் பான் இந்தியா Movie!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் நெல்சன்.  நெல்சனின் நெருங்கிய நண்பரான அனிருத் லைகாவிடம் பேசி நெல்சனை அவர்களிடம் கதை சொல்ல வைத்தார்.


அதன் பிறகு தான் கோலமாவு கோகிலா திரைப்படம் உருவானது. அதன் பின்னர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தார். இந்நிலையில் நெல்சனுக்கு முதல் வாய்ப்பு அமைய காரணமாக இருந்த அனிருத் தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய உதவியை நெல்சனுக்காக செய்துள்ளார்.


தெலுங்கில் வெளியான தேவாரா என்ற படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். ஜூனியர் NTR ஹீரோவாக நடித்திருக்கும் இந்த பான் இந்திய படம் சமீபத்தில் திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத் நெல்சனை ஜூனியர் NTR இடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


அந்த சமயத்தில் நெல்சன் ஒரு கதையை ஜூனியர் NTR க்கு கூறியிருக்கின்றார். அந்த கதை ஜூனியர் NTR க்கு ரொம்ப பிடித்துப்போக நெல்சனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இப்படம் ஒரு பான் இந்திய படமாக தயாராக இருக்கின்றதாம். இப்படி நெல்சன் வளர்ச்சிக்கு அனிருத் உறுதுணையாக இருந்துள்ளார். 

Advertisement

Advertisement