• Jan 19 2025

அடச் சீசீ.. அவ்வளவு கேவலமானவரா பிரதீப்? பிக் பாஸில் அந்த Torcher - உம் நடந்துச்சு? அனைத்தையும் அம்பலமாக்கிய வலைப்பேச்சு பிஸ்மி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக முடிவடைந்து நாட்கள் சில கடந்தாலும், பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற சம்பவங்களின் எதிரொலி இன்றளவில் பேசப்பட்டு தான் வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய பிரதீப், பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு இடையூறு கொடுப்பதாகவும், அவரது தவறான பழக்க வழக்கங்களை சுட்டிக் காட்டியும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

எனினும், இது அவர் மீது தொடுக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டு என்றும், இதற்கு  முக்கிய காரணம் மாயா, பூர்ணிமா தான் எனவும் அவர்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்தது.


இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் பிரதீப்,  அங்கிருந்த பெண் போட்டியாளர்களிடம் தனிப்பட்ட ரீதியில் எல்லை மீறியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டி அளித்துள்ளார்.

அதன்படி அவர் அளித்த பேட்டியில், பிரதீப் ரொம்ப மோசமான நபர் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவர் ஆண் போட்டியாளர்களிடம் வரம்பு மீறி, வன்முறையாய் நடந்து கொண்டு இருந்தார். அதுபோல பெண் போட்டியாளர்களிடம் அவர்கள் தனியாக இருக்கும் போது ரொம்பவும் எல்லை மீறி நடந்துள்ளார்.


இதை நாம் கண்ணால பாக்கல. அது எடிட்டர் வேர்சின் தான். ஆனா அவரை வெளியேற்றும் போது ஒவ்வொருத்தரும் ஓபன் பண்ணுறாங்க. என்கிட்ட அப்படி பேசினார், என்கிட்ட இப்படி நடந்தார் என்று எல்லா விஷயமும் வெளிய வந்தது.

மேலும் அவர் பயங்கரமா கெட்ட வார்த்தை பேசுகிறார் என குற்றம் சாட்டப்பட்ட போது, கமலிடமே ஆமா.. நான் 4 வயசுல இருந்தே கெட்ட வார்த்தை பேசுறேன். எல்லாருக்கும் நான் தான் கெட்ட வார்த்தை சொல்லி கொடுத்து இருக்கன் என சொல்லி இருப்பார்.

இது என்ன மனநிலை என்று மொத்தமாக விளாசியுள்ளார் பத்திரிக்கையாளர் பிஸ்மி.

Advertisement

Advertisement