• Jan 19 2025

நல்ல தெளிவா சொல்லுங்க ராதிகா.. சட்டென டென்ஷனான கோபி! பாக்கியாவிற்கு கிடைத்த சத்தியம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

செழியனும், எழிலும் நன்றாக குடித்துவிட்டு இருக்க, அந்த இடத்திற்கு வந்த பாக்கியா அவர்களுக்கு ஆறுதல் கூறி சாப்பிட வைக்கிறார். என் வாழ்கைல இப்படி ஒரு கட்டம் வந்தப்போ நான் தைரியமா முகம் கொடுத்தேன் என அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, இனி குடிக்க கூடாது என சத்தியம் வாங்குகிறார்.


மறுபக்கம் ஜெனியின் அப்பா கோட்ஸ்க்கு செழியன் வருவான், உன்ன பத்தி என்ன வேணும் என்றாலும் பொய் சொல்லுவான் நீ ஸ்ட்ரோங்கா இரு என சொல்லிக் கூட்டிப் போகிறார். செழியன் வீட்டில் இருந்தும் கோபி, பாக்கியா, செழியன் மூவரும் போக ரெடி ஆகின்றனர். எனினும் நான் அம்மா கூட போய்ட்டு வாரேன் என கோபியை தவிர்த்து செல்கிறார் செழியன். இதன்போது, ஜெனி இல்லாடியும் பரவால்ல.. குழந்தை முக்கியம் என சொல்லி அனுப்புகிறார் ஈஸ்வரி.


இதை தொடர்ந்து கோபி ரூம்க்கு செல்ல, உங்களுக்கு ஏன்  இந்த தேவை இல்லாத வேலை. நான் உங்களுக்கு சொல்லி இருக்கன் தானே. லிமிட்டா இருங்க என்று..செழியன் இப்போ கழட்டிவிட்டு போய்ட்டான். எல்லா விஷயத்துக்கும் அவசரப்படாதீங்க. அப்பா இருக்கன் என்று அவங்களுக்கு புரிய வைச்சா போதும்..வேற எதும்னா என்கிட்ட சொல்லுங்க என கோபியை தாறுமாறாக வறுத்தெடுக்கிறார் ராதிகா.



இதையடுத்து, தனது நண்பனை சந்திக்க சென்ற கோபி இன்னொரு புதிய வேலையில் சேருவதை பற்றி பேச, இப்போ 40 வயசுக்கு மேல வேலை எடுப்பது கஷ்டம் என அவர் சொல்ல, டென்ஷன் ஆகிறார் கோபி. இது தான் இன்றைய எபிசோட்..



Advertisement

Advertisement