• Oct 31 2024

நடிகர் விஜய்யை படுமோசமாக வம்பிழுத்த மீசை ராஜேந்திரன்! மீண்டும் கிளம்பிய சர்ச்சை

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் மீசை ராஜேந்திரன். 

கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் சாதனை படைத்து இருந்தது.

எனினும், லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை, விஜய் சேர் சொல்லட்டும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் பெற்று விட்டது என்று நான் அவர் கால்ல விழுறேன், என்னுடைய மீசையை எடுக்கிறேன் என மீசை ராஜேந்திரன் சவால் விட்டு இருந்தார்.


இதை தொடர்ந்து, லியோ திரைப்படம் வெற்றி பெறவும், தனிப்பட்ட ரீதியில் லியோ படம் எனக்கு பிடிக்கவில்லை என்று அனைவரிடமும் இருந்து நைசாக நழுவி இருந்தார்.


இந்த நிலையில்,  நான் இன்னும் மீசையை எடுக்கல, ஆனால், இப்போ யாரு மீசையை எடுத்திருக்கா பாருங்க என கோட் படத்துக்காக மகன் கதாபாத்திரத்தில் நடிக்க மீசையை எடுத்த விஜய்யை மீண்டும் சீண்டியிருக்கிறார் மீசை ராஜேந்திரன்.


Advertisement