• Jan 19 2025

இளம் சிரிப்புடன் புடவையில் மின்னும் இளம் நடிகை !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தொழில் ரீதியாக நந்திதா ஸ்வேதா என்று அழைக்கப்படும் ஸ்வேதா  தமிழ் மற்றும் கன்னட,தெலுங்கு படங்களில் நடித்து வளர்ந்து வரும் திரைப்பட நடிகையாவார்.2008 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான "நந்தா லவ்ஸ் நந்திதாவில்" நடித்ததன் மூலம் அப் படத்தின் கதாபாத்திரத்தின் பேராலேயே இன்றும் விழிக்கப்படுகிறார்.

Nandita Swetha (aka) Nandita photos stills & images

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் அறிமுக திரைப்படத்திலேயே பெரிதும் பேசப்பட்ட இவரது திறமை இவருக்கு அடுத்தடுத்து தமிழில் பல வாய்ப்புகளை கொண்டுவந்து சேர்த்தன.

Tollywood Actress Nandita Swetha photo gallery | Udayavani – ಉದಯವಾಣಿ

தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த குமுதா கதாபாத்திரம் இன்று வரை தமிழ் ரசிகர்களிடையே குமுதா என்ற விருப்பப் பெயராலேயே அழைக்குமளவு புகழ் பெற்றது.

Nandita Swetha | Happy #deepavali all-) Saree from @vedsilks_by_shravanthi  Clicked by @lavsar_photography #festivewear #festive #whitesaree #bangalore  | Instagram

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மெல்லிய சிரிப்புடன் புடவையில் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.இது தற்போது இவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement