டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கார இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி உள்ள படம் தான் பராசக்தி. இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா, சிவகார்த்திகேயன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது ஜனநாயகன் படத்துடன் போட்டி போடும் பராசக்தி பற்றி சிவகார்த்திகேயன் என்ன பேச உள்ளார் என்று ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர்.
அதன்படி ஆரம்பத்தில் பராசக்தி படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தோம். அதன் பின் விஜய் அண்ணாவின் படம் அக்டோபருக்கு வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்ததும் பராசக்தியை பொங்கலுக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டோம்.
ஆனால் ஜனநாயகன் படமும் திடீரென பொங்கலுக்கு வருவதாக சொன்னதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். உடனே தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு பராசக்தி படத்தை தள்ளி வைக்கலாமே என கேட்டேன், ஆனாலும் அவர்கள் முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டதாக சொன்னார்கள். அதனால்தான் நானும் சம்மதம் தெரிவித்தேன்.
அதற்குப் பிறகு விஜய் சாரின் மேனேஜரை தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். அதற்கு விஜய் இதில் ஒரு பிரச்சனையும் இல்லை, பொங்கலுக்கு சூப்பரா வரட்டும். எஸ்கேவுக்கு வாழ்த்துக்கள் சொன்னதாக கூறினார். 33 வருடங்கள் நம் அனைவரையும் மகிழ்ச்சி படுத்தியவர் விஜய். எனவே ஜனவரி 9 ஜனநாயகனை கொண்டாடுங்க. ஜனவரி 10 பராசக்தியை கொண்டாடுங்கள். யார் என்ன சொன்னாலும் இது அண்ணன் தம்பி பொங்கல் என சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.
Listen News!