• Jan 07 2026

பாரதிராஜாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்.. ஐசியூவில் அனுமதி.! குடும்பத்தினர் சொன்ன தகவல்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  மிகவும் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் பாரதிராஜா. இவருக்கு தற்போது 84 வயதாகிறது. '16 வயதிலேயே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.  தொடர்ச்சியாக கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படங்களை எடுத்து ஹிட் கொடுத்தார். 

சமீபத்தில் அவருடைய மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.  இதனால் பாரதிராஜா மனதளவில் ரொம்பவும் உடைந்து போனார். 

தனது மகனின் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல்  சோகத்தில் காணப்பட்ட பாரதிராஜா கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.  பின்பு மீண்டும் சென்னைக்கு திரும்பினார். 


கடந்த மாத இறுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

தற்போது மீண்டும் ஒரு வாரம் கடந்தும் பாரதிராஜா தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சையிலே காணப்படுகின்றார்.  

இந்நிலையில் தான் பாரதிராஜாவுக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  மேலும் அவர் தற்போது நலமாக உள்ளதாக  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement