• Jan 19 2025

நயன்தாராவுக்கு அடுத்ததாக பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா! விலை மட்டும் இத்தனை கோடியா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் தற்போது தனக்கேற்ற சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடித்தார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

சினிமா துறையில் பிரபலமாக காணப்படும் நடிகர்கள், நடிகைகள் தங்களது வசதிக்கேற்ப தனி விமானங்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த சிரமமும் இன்றி தகுந்த நேரத்திற்கு நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் ஆகியவற்றுக்குச் சென்று வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா டசால்ட் ஃபால்கன் 2000 (Dassault falcon 2000) என்ற சகலவித வசதிகளுடன் கூடிய தனி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது.


சுமார் 120 கோடி ரூபாய் என குறித்த விமானத்தின் விலை கூறப்படுவதோடு இதில் ஆடம்பர அம்சங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு வசதிகளும் காணப்படுகின்றன. இதன் மூலம் தமிழில் அதிக விலையில் தனி விமானம் வைத்திருக்கும் நடிகராக சூர்யா இருப்பதாக திரை வட்டாரங்கள் சொல்கின்றன.

தென்னிந்தியாவில் சிரஞ்சீவி, ராம்சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சில நடிகர்கள்தான் தனி விமானத்தை வைத்துள்ளார்களாம். தமிழில் நயன்தாரா மட்டும் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது இந்த லிஸ்டில் சூர்யாவும் இணைந்துள்ளார்.


Advertisement

Advertisement