தமிழில் சிம்புவின் மாநாடு படத்தில் நடிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களினால் படத்தில் இருந்து விலகிய கஜாடு சமீபத்தில் வெளியாகிய ட்ராகன் படத்தில் நடித்து இளசுகளின் crush லிஸ்டில் சேர்ந்துள்ளார்.
தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் படத்தினை தொடர்ந்து இவருக்கு பல தமிழ் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றும் இவர் அதர்வா நடிப்பில் உருவாகிவரும் இதயம் முரளி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டா பதிவில் அழகிய வீடியோ பதிவு ஒன்றுடன் தன்னை ஒரு தமிழ் பெண்ணாக " வெறும் பெண் அல்லே தமிழ் பெண் நான் " என கூறியுள்ளார். இதற்கு பல சர்ச்சைகள் இணையத்தில் கிளம்பியுள்ளது. வீடியோ இதோ..
Listen News!