தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் படங்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்த படம் சர்க்கார். அந்த படத்தின் மூலம் நடிகர் ஜோசப் விஜய் அரசியல் வருகைக்கு மறைமுக அடித்தளம் அமைக்கப்பட்டதாக ரசிகர்கள் பலரும் கூறி வந்த நிலையில், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அந்த படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் பேசிய கருத்துகள் வைரலாகி வருகின்றன.
அதன்படி, ஏ.ஆர்.முருகதாஸ் தனது உதவி இயக்குநரான பாபு விஜய் இயக்கியுள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலத்தில் என்னுடன் இருந்தவர் பாபு விஜய். ‘சர்கார்’ படம் வெளியான சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை மறக்க முடியாது” என உணர்ச்சியுடன் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், “கருப்பு கண்ணாடி போட்ட காருக்குள் அமர்ந்து கொண்டு நாங்கள் நகரம் முழுக்க சென்றோம். அப்போது தியேட்டர்களில் இருந்த ‘சர்கார்’ பட பேனர்களை போலீசார் கிழித்து எறிந்ததை என் கண்முன்னே பார்த்தேன். அந்த தருணம் எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது” என்று தெரிவித்தார்.
மேலும், “அந்த நேரத்தில் என்னுடன் இருந்து ஆறுதல் அளித்தவர் பாபு விஜய். இன்று அவர் இயக்குநராக மேடையில் நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றும் முருகதாஸ் கூறினார்.
விழாவில் பலரும், “விஜயின் அரசியல் பயணத்துக்கு சினிமாவில் முதல் தீப்பொறி வைத்த படம் ‘சர்கார்’ தான்” என்று பேசியபோது, முருகதாஸ் அமைதியாக அமர்ந்திருந்ததும் கவனத்தை ஈர்த்தது. பின்னர் அவர் பேசிய இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Listen News!