• Jul 13 2026

முதல்வரான பிறகு விஜய்க்கு ஆதரவு சரிந்ததா? ஒரே நாளில் நிகழ்ந்த மாற்றம்.. ஷாக்கில் ரசிகர்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவது தற்போது சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படையாக தெரிகிறது. 

சமீபத்தில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், சட்டப்பேரவையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான M. K. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.


இதன் பின்னர் விஜய்யின் சமூக வலைத்தள செல்வாக்கும் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழக முதலமைச்சரின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1 மில்லியன் ஃபாலோவர்ஸை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கு முன்பு சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியிருப்பது அரசியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வருகைக்கு பிறகும் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறையவில்லை என்பதற்கு இந்த வளர்ச்சி பெரிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், “தமிழக அரசியலின் புதிய டிஜிட்டல் சக்தி விஜய்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement