தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக வெற்றிகரமாக பயணித்து வரும் சந்தானம், தனது அடுத்த புதிய படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர தயாராக உள்ளார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இப்போது அவர் அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் AGS Entertainment சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜாம்பி கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த படம் திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த பாணியில் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, படத்திற்கு ‘லவ் பைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘லவ் பைட்’ படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
Listen News!