• May 13 2026

முதல்வரான சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்கலையா? வெளியான தகவலால் அதிர்ச்சியில் மக்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய், இம்மாத இறுதியில் மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் பயணம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் அதற்கு தனி முக்கியத்துவம் கிடைத்துள்ளது.


இந்த பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், புதிய முதலீடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மத்திய நிதி ஒதுக்கீடு போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை பெறும் நோக்கத்திலும் இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மாநில-மத்திய உறவை வலுப்படுத்தும் முயற்சியாகவும் விஜய்யின் டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த அரசியல் சூழ்நிலையிலேயே டெல்லி பயண தகவல் வெளியாகியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வராக பதவியேற்ற பின்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விஜய், தற்போது தேசிய மட்டத்திலும் தனது அரசியல் பயணத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது டெல்லி பயணம் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement