• May 13 2026

யாழ்ப்பாணத்தில் விஜய்யின் குடும்ப வேர்கள்.? வைரலாகும் சங்கீதாவின் பூர்வீக வீடு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் நடிகரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின்  மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தொடர்பான குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளதாக கூறப்படும் அவர்களின் பாரம்பரிய வீடுகள் குறித்து வெளியாகியுள்ள காணொளிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதன்படி யூடியூபர் ஒருவர், “விஜய்யின் வைஃப் வீடு” எனக் கூறி யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சென்று வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த பயணத்தில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று, அப்பகுதி மக்களிடமும் தகவல்கள் கேட்டு பேசியுள்ளார்.

குறித்த வீடியோவில் பேசிய சிலர், சங்கீதா சொர்ணலிங்கத்தின் குடும்பம் முன்பு அங்கு வசித்ததாகவும், பழைய வீடு இடிக்கப்பட்டு பின்னர் புதிய வீடு கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர். 


இந்த குடும்பம் 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கலவர காலத்திற்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாகவும், பின்னர் லண்டனில் குடியேறியதாகவும் கூறப்பட்டுள்ளது.


அதேபோல், பழைய வீட்டின் அடித்தளம், சுற்றுப்புறம் மற்றும் அருகிலுள்ள சிவன் கோவில் பகுதியையும் அந்த யூடியூபர் காட்டியுள்ளார். “இது விஜய் மாமாவின் மனைவி வீடு” என அப்பகுதி மக்கள் கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.


இதனிடையே, விஜயின் குடும்ப பின்னணி மற்றும் சங்கீதாவின் இலங்கைத் தொடர்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 


சமூக வலைதளங்களில் இந்த காணொளி வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் யாழ்ப்பாணத்துடன் விஜயின் குடும்பத்திற்கு உள்ள உறவுகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement