• May 12 2026

போதை ஒழிப்பில் விஜய் எடுத்த அதிரடி ஆக்ஷன்.! முதல்வர் பக்கம் தலை சாய்த்த கமல்..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பை தீவிரமாக கையில் எடுத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கைகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

குறிப்பாக, “போதை ஒழிப்பு பேசும் அரசு டாஸ்மாக் குறித்து என்ன செய்கிறது?” என்ற கேள்வியுடன் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்கள் பரவிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த முடிவு அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனும் தனது சமூக வலைததள பதிவு மூலம் முதலமைச்சர் விஜய்யை பாராட்டியுள்ளார். 

அவர் வெளியிட்ட பதிவில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பது நீண்டகாலமாக தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பு என்றும், அந்த கோரிக்கையை ஆட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்ற முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மதுபான விற்பனை அரசின் பணியாக இருக்கக்கூடாது; மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 717 கடைகள் மூடப்பட்டிருப்பது தொடக்கம் மட்டுமே என்றும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement