• May 13 2026

Clean Politics-ன்னு வந்த தவெக... இப்போ Dirty Politics நடத்துறாங்க.! மு.க.ஸ்டாலின் காட்டம்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனது பதிவில், “Clean Politics என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது Dirty Politics செய்து வருகின்றனர்.” என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், பிளவுபட்ட அதிமுகவின் சூழ்நிலையை பயன்படுத்தி, அக்கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.


“உங்களுடைய தொடக்கம் இப்படியிருந்தால், முடிவு எப்படி இருக்கும்?” என கேள்வி எழுப்பிய அவர், “இது தூய அரசியலா அல்லது மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் அரசியலா?” என்று மக்கள் பேசும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். அதோடு, தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக உறுப்பினர்களுக்கு என்ன ‘ரிட்டர்ன் கிப்ட்’ வழங்கப்படப் போகிறது என்பதையும் மக்கள் கவனித்து வருகிறார்கள் என கூறினார்.

இறுதியாக, “திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கையில் உறுதியாக இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement