• Jul 14 2026

'சேயோன்' பட லேட்டஸ்ட் அப்டேட்டால் ஷாக்கில் ரசிகர்கள்.! அப்படி என்னதான் ட்விஸ்ட் இருக்கு..

shali / 2 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கமல் ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். 

மேலும், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


இந்நிலையில், தற்போது இப்படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சேயோன்’ திரைப்படத்தில் இடம்பெறும் “வேலும் மயிலும்” என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் சிறப்பம்சமாக, நடிகர் சிவகார்த்திகேயன் தானே பாடலின் வரிகளை எழுதியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் “வேலும் மயிலும்” பாடல் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement