• Mar 19 2026

ப்ரீமியர் ஷோவில் ‘தாய்க் கிழவி’ படத்தைப் பார்த்த பிரபலங்களின் விமர்சனம்!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் ‘தாய்க் கிழவி’. இந்த படம் நாளைய தினம் உலக அளவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘தாய்க் கிழவி’ படத்தின் பிரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் தற்போது விமர்சனங்களை வெளியிட்டு தங்களுடைய பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, ‘தாய்க் கிழவி’ படத்தின் விமர்சனங்களைப் பார்ப்போம்.

இந்த படத்தில் பவுனு தாயாக ராதிகா சரத்குமார் வாழ்ந்து காட்டியுள்ளார். மேலும், தங்கத்தின் மதிப்பு, இந்திய பெண்கள் அதை பாரம்பரியமாக எப்படி பாதுகாத்து வருகின்றார்கள், இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், சொத்தின் மீது உறவுகளுக்கு இடையே உள்ள பேராசை போன்ற விஷயங்களை நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமாக இயக்குனர் சிவகுமார் முருகேசன் எடுத்துக்காட்டி உள்ளார்.

அதன்படி, ராதிகா சரத்குமார் படுத்த படுக்கையாக இருக்கும்போது, அவரை விட்டு பிரிந்து சென்ற மகன்கள் மீண்டும் வந்து அவரைப் பார்க்கின்றார்கள். ஆனால் அவர்கள் உள்ளே செல்லாமல் வெளியே உட்கார்ந்து இருக்க, ஒரு பிளாஷ்பேக் காட்டப்படுகிறது. 


அதில், பவுனு தாயின் கணவர் இறந்த பிறகு சொத்தை பிரித்து கேட்க மகன்கள் வரும்போது, “என் புருஷன் சொத்து கடைசி வரை நான் தான் ஆண்டு அனுபவிப்பேன்” என்று கூறி அவர்களை விரட்டி விடுகிறார். இது ட்ரெய்லரிலும் காட்டப்பட்டது.

இதனால் மகன்கள் தனியாகப் பிரிந்து சென்று, பின்னர் மீண்டும் அம்மாவை பார்க்க வருகின்றார்கள். இறுதியில், ராதிகா சரத்குமார் சேர்த்து பாதுகாத்து வைத்த சொத்தை மகன்கள் மீட்டார்களா? பவுனு தாய்க்கு இறுதியில் என்ன ஆனது? அவர்களின் மகன்கள் அவரை கவனித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதையாக அமைந்துள்ளது.

மேலும், படுத்த படுக்கையாக கிடக்கும் தன்னுடைய அம்மாவை மீட்பதற்காக மகன்கள் பட்ட போராட்டம் தான் கடைசி கட்ட கிளைமேக்ஸாக காணப்படுகிறது. இதுவே இந்த படத்தின் ட்விஸ்டாக அமைந்துள்ளது.

இந்த படத்தை பார்த்த பால சரவணன், சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுதுள்ளார்.

Advertisement

Advertisement