• May 13 2026

மனைவி கூட செய்யத் தயங்கும் அந்த செயல்..? சிரித்த முகத்தில் ரவி மோகன்.! வைரல் வீடியோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ரவி மோகன். அதன் பின்பு பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ரவி மோகன் பல படங்களை தயாரித்து வருகின்றார்.

இதற்கிடையில், தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்பு அவர் கெனிஷா என்பவரிடம் மிக நெருக்கமாக பழகி வருவது தொடர்பில் பல கிசுகிசு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிலும் ரவி மோகன் செல்லும் இடமெல்லாம் கெனிஷாவும் கூடவே செல்கின்றார். ஒரே மாதிரியான ஆடையில், கைகோர்த்துக்கொண்டு அவர்கள் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டன. எனினும் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருவரும் தங்களுடைய பணிகளை தொடர்கின்றனர்.

ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அதன் மூலம் ப்ரோ கோட் மற்றும் ஆர்ட்னரி மேன் என்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளனர்.


இந்த நிலையில், கேரளாவில் நடைபெற்ற கோவில் விழா ஒன்றில் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் இணைந்து பாடிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் அந்த விழாவில் ரவி மோகனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ரவி மோகன் வரும்போது, ரவி மோகனின் காலை தொட்டு வணங்கிவிட்டு கெனிஷா பாடத் தொடங்கியுள்ளார். இந்த செயல் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், மனைவிகூட செய்யத் தயங்கும் இந்த செயலை கெனிஷா மரியாதையுடன் செய்துள்ளார் என்றும் பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை ரீக்ரியேட் செய்த பாடகி கெனிஷா, அந்தப் பாடலை பாடி முடித்ததும் ரவி மோகனை அன்புடன் கட்டி அணைத்த காட்சிகளும் பேசுபொருளாக உள்ளன.

அத்துடன் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய மகன்கள் கொடுத்த பரிசையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “கணவர் இல்லாவிட்டாலும் உங்கள் மகன்கள் உங்களுடன் இருக்கின்றார்கள்” என்று ஆர்த்திக்கு ஆறுதல் தெரிவிக்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement