• May 13 2026

அரசியலில் புது புயல்! விஜய் அரசுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ்… அடுத்து என்ன நடக்கும்?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நியமனங்கள் தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அவரது ஜோதிட ஆலோசகரும் தவெக செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சரின் சிறப்பு பணி அதிகாரியாக ஜோதிடர் வெற்றிவேல் நியமிக்கப்பட்டது குறித்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.


இந்நிலையில், இந்த நியமனம் அரசியலமைப்பு விதிகளுக்கும், முதலமைச்சரின் பதவிப்பிரமாணத்திற்கும் எதிரானது எனக் கூறி வழக்கறிஞர் விஜேந்திரன் சார்பில் அதிகாரபூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பதவிகள் தகுதி மற்றும் நிர்வாக அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிலையில், ஜோதிட ஆலோசகர் போன்ற பண்பாட்டு அல்லது தனிப்பட்ட ஆலோசகர்களை அரசுப் பொறுப்பில் நியமிப்பது முறையற்ற நடைமுறை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இத்தகைய நியமனங்கள் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும் என்றும், நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக இந்த நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும், இல்லையெனில் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தரப்பு இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் வழங்காத நிலையில், எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், இந்த நியமனம் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரிய பிரச்சினையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement