• May 12 2026

பிரேமலதாவின் பேச்சால் அதிர்ந்த அவை… விஜய்யை சுற்றி உருவான புதிய சர்ச்சை!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டசபையின் இரண்டாம் நாள் அமர்வு இன்று கூடிய நிலையில், அவை முழுவதும் புதிய மாற்றங்களும், அரசியல் பரபரப்பும் நிறைந்ததாக காணப்பட்டது. இன்றைய முக்கிய நிகழ்வாக, புதிய சபாநாயகராக J.C.D. பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார். அதேபோல், துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் அமரவைத்தனர். இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அவை முழுவதும் ஒரு மரியாதையான மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சூழ்நிலை நிலவியது.


இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அவையில் பேசுகையில் பல முக்கிய கருத்துகளை முன்வைத்தார். அவர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், பேரவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

அதோடு, எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய் அவருக்கு பாராட்டும் தெரிவித்தார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் வெற்றி பெற வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

Advertisement

Advertisement