தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் தகவலாக, அதிமுக முன்னாள் MLA மற்றும் முன்னாள் DGP ஆன R. நட்ராஜ், முதலமைச்சர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக விஜயின் அரசியல் நகர்வுகள் மாநில அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல்களின் படி, நேற்று அமைச்சர் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து R. நட்ராஜ் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின் போது தவெகவில் இணைவது குறித்து உறுதியான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பெரிய அரசியல் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, அதிமுகவில் தற்போது EPS மற்றும் SP வேலுமணி ஆதரவாளர்கள் என இரண்டு அணிகள் உருவாகியுள்ளதாக கூறப்படும் சூழலில், பல முன்னாள் MLA-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாற்று அரசியல் தளத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக முதலமைச்சர் விஜயின் வேகமான நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆதரவு காரணமாக பலரும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Listen News!