தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய சட்டப்பேரவை விவாதத்தில், தமிழக வெற்றிக் கழக அரசு மீது தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்தாலும் சில முக்கியமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

அவர் உரையில், தமிழக வெற்றிக் கழகத்தில் “குதிரை பேரம்” நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுகுறித்து தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், முதல்வர் விஜய் எடுத்த சில நிர்வாக முடிவுகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அரசின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
குறிப்பாக, முதல்வரின் அரசியல் சிறப்பு அதிகாரியாக அவரது “ராஜகுரு” என கூறப்படும் ஜோதிடர் நியமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த தகவலை அவர் கடுமையாக விமர்சித்தார். தனிப்பட்ட ஆலோசகராக வைத்துக்கொள்வது வேறு, ஆனால் அரசுப் பதவியில் ஒருவரை நியமிப்பது ஏன் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். இது இளைஞர்கள் அளித்த வாக்குகளுக்கு ஏற்புடையதா எனவும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகளை “எதிரி” என பார்க்காமல் செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார். மக்கள் நலன், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தவெக அரசு முன்னுதாரணமான ஆட்சியை வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தனது உரையில் தெரிவித்தார்.
Listen News!