• May 13 2026

அதிர்ஷ்டமா நினைத்த விஷயம்.. இறுதியில் சாபமா மாறியதா? கான் சிட்டி குறித்து லீக்கான தகவல்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

'கான் சிட்டி' திரைப்படம் புதுமையான கதைக்களத்துடன் உருவாகி வரும் நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் கடன் சுமையால் தவிக்கும் சூழலில், திடீரென பட்டன் அழுத்தினால் பணம் கொட்டும் மர்ம இயந்திரம் ஒன்று அவனது வாழ்க்கையில் தோன்றுகிறது. 

அந்த இயந்திரத்தை மையமாகக் கொண்டு குடும்பத்தினருக்குள் உருவாகும் ஆசை, பேராசை, குழப்பம் மற்றும் அதனால் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ‘கான் சிட்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement