• Jul 14 2026

‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் கதை இதுதானா.? உண்மையை உடைத்த நடிகர் ஜெய்

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘சட்டென்று மாறுது வானிலை’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பட அனுபவங்களை பகிர்ந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெய் பேசும்போது, முதல்வர் விஜய் பாணியில் “என் நெஞ்சில் குடியிருக்கும்...” என தொடங்கி உரையாற்றிய நிகழ்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது மேடையில் பேச வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனவும் அவர் கூறினார். மேலும், படத்தில் தான் விஜய்யின் தீவிர ரசிகராக நடித்துள்ளதாகவும், அந்த கதாபாத்திரத்தில் விஜயை ஒத்த சாயல் இருப்பதாக படக்குழு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயக்குநர் பாபு விஜய் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகன் பாத்திரத்தை தேவையான அளவிலேயே வடிவமைத்துள்ளதாகவும் ஜெய் பாராட்டினார். இதனால் படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அவர், ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற தலைப்பைப் போலவே, தமிழ் சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை இந்த படம் ஏற்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement