பிக் பாஸ் பிரபலமான ஜி.பி. முத்து சமீபத்தில் கோவில் தொடர்பான சர்ச்சை சம்பவத்தில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பேசும் ஜி.பி முத்து, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் சிலர் தனது வீட்டிற்கு வந்து அட்டூழியம் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, தனது குடும்பத்தினரை மிரட்டியதுடன் வீட்டின் கதவுகள், பொருட்கள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் சில அரசியல் கட்சி ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், போலீசில் புகார் அளித்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
“என் வீட்டை உடைக்க அவர்களுக்கு என்ன உரிமை? என் குடும்பத்தினரை மிரட்ட என்ன காரணம்?” எனக் கேள்வி எழுப்பிய ஜி.பி முத்து, தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பு மிரட்டல் விடுப்பவர்களுக்கே எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், தனக்கு நியாயம் கிடைக்க உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். “அரசு மாறிவிட்டது… விஜய் கண்டிப்பாக எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் ஜி.பி முத்துவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த பிரச்சனையில் தமிழக அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Listen News!