தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தனது அரசியல் பயணத்தில் புதிய ஸ்டைல் அடையாளத்தையும் உருவாக்கியுள்ளார். இதுவரை தமிழக முதல்வர்கள் பெரும்பாலும் வேட்டி மற்றும் வெள்ளை சட்டையில் பொதுவிழாக்கள் மற்றும் சட்டசபைக்கு வந்த நிலையில், விஜய் கருப்பு நிற கோட்-சூட் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கோட்-சூட்டை பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபீர் அகமது வடிவமைத்துள்ளார். குறிப்பாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் அவர் தோன்றிய ஸ்டைலை அடிப்படையாக கொண்டு இந்த உடை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கோட்டின் நிறமாக கருப்பை தேர்வு செய்தது விஜயின் சொந்த விருப்பமாம். அதிகாரம், ஆளுமை மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் நிறம் என்பதால் கருப்பு தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜயின் உடலமைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் இந்த கோட்டை வடிவமைத்து சரிசெய்ய மட்டும் இரண்டு நாட்கள் எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், “தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்திருக்கலாம்” என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. ஆனால், “என் வழி தனி வழி” என்பது போல விஜய் தனது தனித்துவ ஸ்டைலை தொடர்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனுடன், முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் எடுத்த சில நடவடிக்கைகளும் கவனம் பெற்றுள்ளன. நேற்று மூத்த அரசியல் தலைவர்களான மு.க. ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து மற்றும் ஆசி பெற்றார்.
அதேபோல், பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Listen News!