• Jun 03 2026

கிர் காட்டில் வனத்துறை விதிமுறையை மீறினாரா ராகுல் ப்ரீத் சிங்.. உண்மையில் நடந்தது என்ன.?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையான ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஹிந்தியில் உருவாகியுள்ள ‘பதி பத்னி அவர் லோ 2’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் அருகிலுள்ள புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா பகுதிக்கும் விஜயம் செய்தார். 

இந்த சுற்றுப்பயணத்தின் போது, வனப்பகுதிக்குள் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு விதிகளை மீறியதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.


குறிப்பாக, தேசிய பூங்கா போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வாகனத்திலிருந்து இறங்குவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ராகுல் ப்ரீத் சிங் விதிமீறலில் ஈடுபட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இதனால் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கிர் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், நடிகை வனப்பகுதியின் உள்ளே அல்லாமல், கிர் தேசிய பூங்காவின் நுழைவு வாயிலுக்கு வெளியே மட்டுமே நடந்து சென்றார் என்றும், எந்தவிதமான வன விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement