• May 13 2026

விஜய் CM ஆனதும்… ‘ஜன நாயகன்’ விலை பல மடங்கு உயர்வு.!போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் OTT உரிமை தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

ஆரம்பத்தில் படம் திரையரங்கிலும், OTT-யிலும் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை சிக்கல்கள் மற்றும் சில எதிர்பாராத பிரச்சினைகள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது. அதோடு, படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவலும் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் OTT உரிமையை முதலில் அமேசான் பிரைம் வீடியோ வாங்கியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் வெளியீட்டு பிரச்சினைகள் காரணமாக அந்த ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த குழப்பமும் நீடித்தது.


ஆனால் தற்போது நிலைமை முழுவதுமாக மாறியுள்ளது. தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, அவரின் பிரபலமும் மக்கள் கவனமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் பல முன்னணி OTT நிறுவனங்கள் ‘ஜன நாயகன்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்ற கடும் போட்டியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, விஜயின் அரசியல் வெற்றிக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் திரையரங்கு உரிமைகள் மட்டுமின்றி OTT உரிமைகளின் மதிப்பும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜன நாயகன்’ படத்தில் விஜயுடன் இணைந்து பாபி டியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement