• Apr 01 2025

முன்னனி நடிகையுடன் ஜோடி சேரவுள்ள கவின்..! போஸ்ட்டர் இதோ...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் கவின் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியாகிய "bloody bagger " திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பினை பெறாமல் தோல்வியடைந்தது.அதன் பின்னர் இவர் கிஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார்.பிக்போஸ் மூலம் பட வாய்ப்புகள் கிடைத்த நடிகரில் ஒருவராக இருந்து வரும் இவர் தற்போது முன்னனி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கியுள்ளார்.


மற்றும் இவர் நயன்தாராவுடனும் ஒரு படத்தில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.இந்த நிலையில் தற்போது கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியின் கீழ் வெற்றிமாறன் வழங்கும் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் திரைப்படம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது.


கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு வேலைகள் விரைவாக நடந்து வருவதுடன் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement