பிரபல பாலிவுட் நடிகை மௌனி ராய், ‘நாகினி’ சீரியல் மூலம் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். குறிப்பாக தமிழ்நாட்டில் அவருக்கு தனி வரவேற்பு உள்ளது.
2022ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார் மௌனி ராய். கேரளாவை சேர்ந்த மலையாளி பின்னணியைக் கொண்ட அவருக்கு, பெங்காலி மற்றும் மலையாள மரபுகளின் படி இருவிதமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று ரசிகர்கள் நம்பினர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மௌனி ராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் Unfollow செய்ததாகவும், அதேபோல் அவரது கணவரும் மௌனி ராயை பின்தொடரவில்லை என்றும் கூறப்பட்டது.
மேலும் இருவரும் தங்கள் திருமண புகைப்படங்களை நீக்கியதாகவும் சிலர் கவனித்தனர். இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கலாம், பிரிவு நிலை ஏற்பட்டிருக்கலாம் என வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம், எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் ஓரளவு தெளிவாகியுள்ளது.
Listen News!